விவசாயம் சார்ந்த தொழில் செய்ய விருப்பப்படும் இளைஞரா நீங்க ? அப்போ உங்களுக்கு 1 லட்சம் கன்பார்ம் !

1 lakh rupees stipend for agriculture related works by youngsters

தமிழகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்துள்ளார். பல்வேறு சிறப்பம்சங்களை சார்ந்து இந்த பட்ஜெட் தாக்கல் நடைபெற்றுள்ளதாக தகவல் உலாவி வருகிறது. இந்நிலையில், இன்று எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது, வேளாண்மை தோட்டக்கலை பொறியியல் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், 2022-23ம் நிதியாண்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அக்ரி கிளீனிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அதனை லாபகரமாக மாற்ற 2,500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கடந்த ஆண்டை போலவே 2022-23ம் ஆண்டிலும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Share this post