சொகுசு கப்பலை தாக்கிய ராட்சத அலை: அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்..வைரலாகும் வீடியோ!!

Germany Ship Attacked In Sea Passengers Scared

ஜெர்மனியில் ஹம்பர்க்கில் உள்ள எல்பே ஆற்றில் பயணித்த சொகுசு படகு ஒன்று புயலால் ஏற்பட்ட ராட்சத அலையால் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெர்மனியில் சில பகுதிகள் யெலேனியா புயலால் பாதிப்பை சந்தித்துள்ளது. வடக்கு ஜெர்மனியில் உள்ள ஹார்ஸ் மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரத்தில் மணிக்கு 94 மைல் வேகத்தில் காற்றின் வேகம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக 170க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் நகரங்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெர்மனியின் நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் மின்வெட்டு சுமார் 50,000 குடும்பங்களை பாதித்துள்ளது என்று போர்கன் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் படகு ஒன்று சில பயணிகளுடன் பயணித்து கொண்டிருந்தது.

அப்போது, புயலால் ஏற்பட்ட திடீர் ராட்சத அலை படகை வேகமாக தாக்கியுள்ளது. இதனால், படகில் பயணம் செய்த பயணிகள் கீழே தள்ளப்பட்டனர். இதனையடுத்து, பயணிகள் அலறி அடித்து ஓடிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Share this post