ஜூலை 17ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான NEET நுழைவுத் தேர்வு

Neet entrance exam 2022 will held on july 2022

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு நாளை மறுநாள் முதல் மே 7ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனம் இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தேசியத் தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்றி தமிழக கவர்னக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து நீட் தேர்வு மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post