Captain Cool த்ரில் ஆட்டத்தை பார்த்து துள்ளிக்குதித்த பிரபல தமிழ் நடிகர்.. வைரலாகும் வீடியோ !

தமிழ் திரையுலகில் விவேக், சந்தானம் வரிசையில் நகைச்சுவை நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூரி. அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.
இந்நிலையில், நேற்று ஐபிஎல் ஆட்டத்தில் தோனியின் கடைசி ஓவர் ஆட்டம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து, இவரது வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதி கொண்டது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 156 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே ரன் அடிக்க முடியாமல் திணறி வந்த சென்னை அணி விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. கடைசி கட்டத்தில் பிரிட்டோரியஸ் ஆட்டமிழக்க சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை உனாத்கட் வீச வந்தார். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.
இதையடுத்து எஞ்சியுள்ள 4 பந்துகளையும் எதிர்கொண்ட தோனி 6, 4, 2, 4 என அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி சென்னை அணியை வெற்றியடைய செய்தார். 1 பந்துக்கு 4 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் கூலாக பவுண்டரி அடித்து தோனியின் புகழ் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இதை பார்த்து மெர்சலான நடிகர் சூரி, டிவி முன்பு துள்ளிக்குதித்து சென்னை அணியின் வெற்றியை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Thala thalathan #msd #MSDhoni #csk #yellove #ipl2022 #BCCI #ipl pic.twitter.com/8eST2IYdwM
— Actor Soori (@sooriofficial) April 21, 2022