திடீரென அறிவிக்கப்பட்ட லாக்டவுன்.. வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்கள்.. அட கடவுளே !

Village people announced lockdown for themselves afraid of evil spirits

2019ம் ஆண்டு இறுதி முதல் லாக்டவுன், ஊரடங்கு போன்றவை மிகவும் சகஜமாக மாறிவிட்டது. நிலைமைக்கு ஏற்றார் போல மக்களும் வாழ பழகிவிட்டனர். லாக் டவுன் காலத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்தனர்.

கொரோனா பரவல் அனைத்தும் நீங்கி மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள இந்த சமயத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும், இதனால், முகக்கவசம் கட்டாயம் என அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சுருபுஜிலி மண்டல் என்ற கிராம மக்கள் கடந்த ஏப்ரல் 17ம் தேதி முதல், பேய்க்கு பயந்து தங்களுக்கு தாங்களே லாக்டவுனை அறிவித்துக்கொண்டு யாரும் ஊரை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்துள்ளனர்.

இது குறித்து விசாரித்தபோது, இந்த கிராமத்திற்கு பேய் சாபம் இருப்பதாக அந்த மக்கள் நம்புகின்றனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டு ஒரு பூஜை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.

இதனால் தற்போது கிராமத்தை பேய் பிடித்துள்ளதாக நினைத்து, கடந்த ஏப்ரல் 17ம் தேதி அந்த கிராம மக்கள் ஒரு பூஜை ஒன்றை செய்துள்ளனர். அந்த பூஜை செய்து வீட்டிற்குள் சென்றவர்கள் யாரும் வீட்டை விட்டே பின்னர் வெளியே வராமல் தாங்களாக லாக்டவுனை அறிவித்துக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளனர். இது எல்லாவற்றிற்கும் காரணம் கடந்த சில ஆண்டுகளாக சரியாக பூஜை நடக்கவில்லை என அந்த கிராம மக்கள் கருதுகின்றனர்.

இந்த தகவல் அப்பகுதி போலீசாருக்கு தெரியவந்தது போலீசார் அந்த கிராமத்திற்குள் நேரடியாக சென்று அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அந்த கிராமத்தில் லாக்டவுன் நீக்கப்பட்டது.

இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this post