பிரபல தமிழ் நடிகையுடன் விஷால் காதல்.. விரைவில் திருமணம்.. இதைதான் மறைமுகமா சொன்னாரா?

vishal in love with popular tamil actress information getting viral

பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

vishal in love with popular tamil actress information getting viral

இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார். இதன் நடுவே, இவர் நடிப்பில் வெளியான, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

vishal in love with popular tamil actress information getting viral

நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

vishal in love with popular tamil actress information getting viral

தற்போது இவர் நடிப்பில் லத்தி படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

vishal in love with popular tamil actress information getting viral

நடிகர் விஷாலுக்கு 40 வயது கடந்த போதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் சில வருடங்களில் இந்த காதல் பிரேக் அப் ஆனது.

vishal in love with popular tamil actress information getting viral

இதன் பின்னர், ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை காதலித்தார் விஷால், இவர்கள் இருவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் தீர்க்கமாக இருந்த விஷால் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். இதனால் அனிஷா உடனான திருமணமும் நிறுத்தப்பட்டது.

vishal in love with popular tamil actress information getting viral

மேலும் விஷாலின் தந்தை விரைவில் விஷாலுக்கு பிடித்த பெண்ணுடன் திருமண நடக்கும் எனக் கூறியிருந்தார். அதேபோல் விஷாலும் அப்பா, அம்மா, பார்க்கிற பெண்ணெல்லாம் எனக்கு செட் ஆகுமா என்று தெரியவில்லை? நிச்சயம் லவ் மேரேஜ் தான் பண்ணுவேன் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், விஷால் தன்னுடன் பூஜை படத்தில் நடித்த நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

vishal in love with popular tamil actress information getting viral

இவர்கள் இருவரும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை விஷாலும், அபிநயாவின் தரப்பிலும் தான் கூற வேண்டும்.

vishal in love with popular tamil actress information getting viral

Share this post