'விக்ரம்' சண்டைக்காட்சி எப்படி எடுத்திருக்காங்கனு பாருங்க ! வெளியான மிரட்டல் MAKING VIDEO

Vikram film fight scenes making video released

அரசியல், நடிப்பு, பிக் பாஸ் என பிசியாக வலம் வந்த கமல் ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகும் திரைப்படம் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Vikram film fight scenes making video released

கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா என்பவர் ஜோடியாக நடித்துள்ளாதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் கமலை இளம் வயது தோற்றத்தில் காட்ட ரூ.10 கோடி செலவில் ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை திரையிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. படத்தை வெளியிட மாஸ் வேலைகளை மும்மரப்படுத்தப்பட்டு வருகிறது.

திரைப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ளன. அதன்படி தற்போது முதல் சிங்குளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் சிங்கிள் வரும் மே 11ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தல பத்தல எனத் தொடங்கும் இப்பாடலை நடிகர் கமல்ஹாசனே எழுதி பாடி உள்ளதாக, இசையமைப்பாளர் அனிருத் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

Vikram film fight scenes making video released

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15ம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் நேரு உள் விளையாட்டரங்கில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (10.05.2022) ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இரட்டையர்களுக்கு பிறந்தநாள் என்பதால், அதனை முன்னிட்டு விக்ரம் படக்குழு சண்டைக்காட்சி உருவாக்கம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

Share this post