Viral Video : 'பீஸ்ட்' டீமுடன் ரோல்ஸ் ராய்ஸில் விஜய் ஜாலி ரைடு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட்.சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், சதீஷ், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், மனோஜ் பரமஹம்சா, நெல்சன் ஆகியோருடன் நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இப்படத்திற்கு ஆடியோ லான்ச் எதுவும் நடைபெறாத காரணத்தினால், நேற்று ஞாயிறு அன்று, நெல்சன் மற்றும் விஜய் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடந்தது. இந்த பேட்டியின் போது பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான சதீஷ், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆகியோருடன் இணைந்து இயக்குனர் நெல்சனும் நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம்.
ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து நடிகர் விஜய் வீட்டுக்கு செல்லும் போது தங்களது ஆசையை விஜய்யிடம் கூறியுள்ள நிலையில், ‘வாங்க இப்பவே போலாமே’ என ஓகே சொன்ன விஜய், அவர்கள் 5 பேரையும் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். இதனை சதீஷ் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Rolls-Royce tour with #Vijay and #Beast team ❤️pic.twitter.com/la3068LTOF
— 🧨 Thalapathy Paris 🧨 (@ThalapathyParis) April 10, 2022