ஹன்சிகா, பூஜா ஹெக்டே, யாஷிகா, தமன்னா என டாப் 10 ஹீரோயின்ஸ்.. களைகட்டப்போகும் ‘லெஜண்ட்’ ஆடியோ லாஞ்ச்

The legend saravana stores hero invited top 10 heroines for audio launch

பிரபல கடையான சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் அதன் உரிமையாளர் சரவணன் அருள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் என்றாலே நினைவுக்கு வருபவர்.

தனது கடைகளின் விளம்பரங்களில் நடிகர்களை நடிக்க வைக்காமல் இவரே பல விதமான உடைகளை அணிந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னணி நடிகைகளை நடித்துள்ளனர்.

The legend saravana stores hero invited top 10 heroines for audio launch

இந்நிலையில், சரவணன் சமீபத்தில் இயக்குனர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ‛தி லெஜண்ட்’ என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இதில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா, ராய் லக்ஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரோபோ சங்கர், சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

The legend saravana stores hero invited top 10 heroines for audio launch

ஏற்கனவே ஜேடி ஜெர்ரி, அஜித்தின் உல்லாசம், ஷெரின் நடித்த விசில் போன்ற படங்களை இயக்கி உள்ள இவர்களுக்கு இது மூன்றாவது படம்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

The legend saravana stores hero invited top 10 heroines for audio launch

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா வரும் மே 29ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இப்படத்தில் இருந்து மொசலோ மொசலு மற்றும் வாடிவாசல் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

The legend saravana stores hero invited top 10 heroines for audio launch

வருகிற மே 29ம் தேதி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், நடிகைகள் பூஜா ஹெக்டே, ஹன்சிகா, தமன்னா, ராய் லட்சுமி, ஊர்வசி ரவ்துலா, யாஷிகா ஆனந்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி ஆகிய 10 பேர் கலந்துகொள்ள உள்ளார்களாம்.

The legend saravana stores hero invited top 10 heroines for audio launch

லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அந்த நடிகைகள் அனைவரும் லெஜண்ட் படத்தின் ஆடியோ லாஞ்ச்சில் கவர்ச்சி நடனமும் ஆட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விழா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

The legend saravana stores hero invited top 10 heroines for audio launch

Share this post