'சூப்பர் பா.. செம acting.. கடைசி 30 நிமிஷம் கண்ணீர அடக்க முடில' - டான் படம் பார்த்துவிட்டு SKவிடம் பேசிய சூப்பர் ஸ்டார் !

Superstar rajinikanth phone call to sivakarthikeyan after watching don movie

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Superstar rajinikanth phone call to sivakarthikeyan after watching don movie

அதன் பின்னர், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

Superstar rajinikanth phone call to sivakarthikeyan after watching don movie

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டிய நடிகர் சிவகார்த்திகேயன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Superstar rajinikanth phone call to sivakarthikeyan after watching don movie

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிளாக்பஸ்டராக மாறியுள்ள இப்படம் சிவகார்த்திகேயனுக்கு மைல்கல்லாக மாறியுள்ளது.

நல்ல விமர்சனங்களை பெற்று வரும் டான் திரைப்படம், தற்போது வரை இப்படம் உலகளவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் புரிந்து சாதனை படைத்திருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டாக்டர் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Superstar rajinikanth phone call to sivakarthikeyan after watching don movie

இதனிடையே சிவகார்த்திகேயன் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் ரஜினி டான் திரைப்படத்தை பார்த்து ரசித்ததாக கூறியுள்ளார். டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு, “சூப்பர் பா, நல்ல நடிப்பு, கடைசி 30 நிமிடங்கள் என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை” என கூறியதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Share this post