எல்லா உண்மைகளையும் சொல்ல போறேன்.. வாழ்க்கையை சீரழித்த இயக்குனர் தம்பி: கதறிய சோனா..!

'Still Unmarried Because I Am Considered A Glamorous Actress': Sona Heiden

கவர்ச்சியாக பல படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் சோனா. கவர்ச்சி நடிகையாக இருந்து பின்னர் தயாரிப்பாளராக மாறிய நடிகை சோனா, மலையாள படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

மேலும், ‘கவர்ச்சியான வேடங்களில்’ நடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இனி கிளாமர் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்து இருந்தார்.

'Still Unmarried Because I Am Considered A Glamorous Actress': Sona Heiden

தற்போது நடிகை சோனா அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து ஸ்மோக் என்று வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். அவர் சந்தித்த வலிகள் பிரச்சினைகள் என அனைத்தையும் அந்த கதையில் கூறியிருக்கிறாராம். மேலும், பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட சோனா அவருக்கு ஏன் திருமண ஆகவில்லை என்ற காரணத்தையும் தெரிவித்திருக்கிறார். அதாவது கவர்ச்சி நடிகை என எல்லோரும் தன்னை அழைத்ததால் தனக்கு திருமணம் கூட ஆகவில்லை என்றும், சினிமாவில் நடித்ததால் அந்த மாதிரியான பெண் என நினைத்து விட்டார்கள் எனவும் சோனா தெரிவித்து இருக்கிறார்.

'Still Unmarried Because I Am Considered A Glamorous Actress': Sona Heiden

இந்நிலையில், முன்னதாக சோனா அளித்த பேட்டியில், தன்னுடைய சுயசரிதையை வெப்தொடராகப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அது குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பிரபல இயக்குனரின் தம்பியும் பிரபல பாடகரின் மகனுமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், திருமணம் வரை சென்ற அந்த உறவு தயாரிப்பாளர் ஒருவர் கூறியதால் அப்படியே இயக்குனரின் தம்பி பின்வாங்கி விட்டதாகவும், இதனால் அவர்களை பழித்திர்க்க சோனா இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share this post