பிரபல யூ-டியூப் சேனலை விலைக்கு வாங்கிய SK ? சைலெண்டாக SK மனைவி ஆர்த்தி செய்யும் வேலை !

Sivakarthikeyan owns popular youtube channel and arthi in important position

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Sivakarthikeyan owns popular youtube channel and arthi in important position

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sivakarthikeyan owns popular youtube channel and arthi in important position

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

Sivakarthikeyan owns popular youtube channel and arthi in important position

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan owns popular youtube channel and arthi in important position

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Sivakarthikeyan owns popular youtube channel and arthi in important position

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Sivakarthikeyan owns popular youtube channel and arthi in important position

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், ரித்து வர்மா, உக்ரைன் மாடல் அழகி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Sivakarthikeyan owns popular youtube channel and arthi in important position

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் முக்கியமானவராக திகழ்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இவரது திரைப்பட வசூல்களும், சம்பளமும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது இவரை பற்றி ஒரு செய்தி கோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

Sivakarthikeyan owns popular youtube channel and arthi in important position

அதாவது, இவர் பிரபல யூ-டியூப் சேனல் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் என்றும், அதில் அதிகபட்ச ஷேர் இவருடையது தான் என்றும் தகவல் கசிந்து வருகிறது. மேலும், அந்த யு-டியூப் சேனலுக்கு சொந்தமாக ஒரு ஓடிடி தளமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த ஓடிடி நிறுவனத்திற்கு வரும் திரைப்படங்களுக்கு உரிமை கோரும் படிவத்தில் கையெழுத்து போடும் முக்கிய நிர்வாகியாக சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி உள்ளாராம். இதனை அறிந்ததும் நெட்டிசன்கள் அந்த youtube சேனல் எதுவாக இருக்கும், யூடியூப் சேனலோடு ஓடிடி தளம் வைத்திருக்கும் அந்த ‘கருப்பு ஆடு’ யார் என்று இணையத்தில் துலாவி வருகின்றனர்.

Share this post