பொன்னியின் செல்வன்'ல சிம்பு'வ நடிக்க விடாம ஒதுக்கிய நடிகையும், 2 நடிகர்களும் ? வெளியான அதிர்ச்சி தகவல் !
டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது. இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார்.
தற்போது, இவர் நடித்து வந்த வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்காக நடிகர் சிம்பு 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து வித்தியாசமான கெட் அப்பில் நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும், ஹன்சிகா, சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மஹா திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதனால், சிம்பு ரசிகர்கள் குஷியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிம்பு நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படம் பத்து வருடங்களுக்கு முன்பே விஜய்யிடம் பேசப்பட்ட போது, இதில் நடிக்க நிறைய நாட்கள் தேவைப்படும் என்பதால் நடிக்க மறுத்துவிட்டார். இது திரைப்படம் தற்போது உருவாகும் காலகட்டத்தில் நயன்தாரா, சிம்பு, விக்ரம், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் உறுதி ஆனார்கள்.
ஆனால், சிம்பு மணிரத்தினத்தின் ஆசையால் நடிக்க வரவே, நம்பர் நடிகர் மற்றும் 2 முக்கிய நடிகர்கள், சிம்பு நடித்தால் நடிக்க மாட்டேன் என கூறவே, இதை எதிர்பார்க்காத மணிரத்தினம் சிம்புவிடம் தெரிவித்தார். சிம்பு இதனால் விலகிவிட்டார். பின்னர் அந்த ஸ்டார் நடிகையும் நடிக்கவில்லை.
சிம்பு நடித்தால் மற்ற முக்கிய கதாநாயகர்கள் நடிக்க மாட்டோம் என்று கூறி விட்டதால் கடைசியில் சிம்புவை நடிக்க வைக்கவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. சிம்புவை வைத்து எடுத்த பொன்னியின் செல்வனின் போட்டோக்கள் இன்றும் இருக்கிறது. அந்த முக்கிய நடிகர்கள் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.