Viral Video: திருமண வாழ்க்கை சந்தோஷமாக இல்லாமல் போனதற்கு இவர்தான் காரணம்.. பிரபல இயக்குனர் பெயரை பேட்டியில் கூறிய சமந்தா

Samantha blames popular director for her unhappy marriage life video getting viral

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

Samantha blames popular director for her unhappy marriage life video getting viral

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

Samantha blames popular director for her unhappy marriage life video getting viral

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர்.

Samantha blames popular director for her unhappy marriage life video getting viral

விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Samantha blames popular director for her unhappy marriage life video getting viral

நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை நிராகரிக்கும் வகையில் நாக சைதன்யா விளக்கம் அளித்திருந்தார். அதாவது, சமந்தாவுக்கும், இவருக்கும் இன்னும் விவாகரத்து நடக்கவில்லை, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Samantha blames popular director for her unhappy marriage life video getting viral

இதனிடையே நடிகர் நாக சைதன்யா தெலுங்கு நடிகை ஷோபிதா என்பவரை காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் ஜோடியாக டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சமீபத்தில் கூட ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனக்கு சொந்தமான பங்களாவுக்கு ஷோபிதாவை நாகசைதன்யா அழைத்து வந்ததாகவும், அங்கு இருவரும் சில மணிநேரம் தங்கி இருந்ததாகவும் கூறப்பட்டது.

Samantha blames popular director for her unhappy marriage life video getting viral

இதனை சமந்தா தரப்பில் பரப்பப்பட்ட செய்தி என்றும், நாக சைதன்யாவின் பெயரை கெடுக்கவே அவர் இவ்வாறு செய்து வருவதாகவும் சமூக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு சமந்தா ட்விட்டரில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

Samantha blames popular director for her unhappy marriage life video getting viral

இத்தனை நடந்தாலும், சமந்தா - நாக சைதன்யா அவர்களின் விவாகரத்து குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஒரு நிகழ்ச்சியில் சமந்தா தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து பேசியுள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது.

Samantha blames popular director for her unhappy marriage life video getting viral

அதாவது, பாலிவுட் சின்னதிரையில் மிகவும் பேமஸ் ஆன நிகழ்ச்சி என்றால் காபி வித் கரண் ஜோகர். இவ்வளவு இந்தியில் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோவான காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் சமந்தா அண்மையில் கலந்துகொண்டார். அதில் ‘நான் ஏன் சைதன்யாவை பிரிந்தேன்’ என தனது விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது செம வைரலாக பேசப்பட்டது.

Samantha blames popular director for her unhappy marriage life video getting viral

இந்நிகழ்ச்சியின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நடிகை சமந்தா, திருமண வாழ்க்கை சந்தோஷமில்லாமல் அமைவதற்கு நீங்கள் தான் காரணம் என அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், பிரபல பாலிவுட் இயக்குனருமான கரண் ஜோகரை பார்த்து கூறுகிறார். ஏனென்றால் நீங்கள் தான் K3G படத்தில் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என காட்டினீர்கள்.

Samantha blames popular director for her unhappy marriage life video getting viral

ஆனால் உண்மையில் அது கே.ஜி.எஃப் படம் போன்று பல பிரச்சனைகள் நிறைந்தது என கூறினார் சமந்தா. இந்நிகழ்ச்சி வருகிற ஜூலை 7ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் சமந்தா பேட்டியை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Share this post