'என் மகளே என்னை அங்கிள்னு கூப்பிட்டா..' முதல் மனைவியை பிரிந்தது குறித்து கண்கலங்கி பேசிய ராபர்ட் மாஸ்டர்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ராபர்ட். நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் நன்றாக விளையாடி வருகிறார். சில டாஸ்குகளில் இவர் வெற்றியும் பெற்று இருக்கிறார். இப்படி ஒரு நிலையில், பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் ராபர்ட் மாஸ்டர் – ரக்ஷிதா இருவரும் எதிர் எதிரே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
தற்போது, தங்கள் வாழ்க்கை குறித்து பேசும் டாஸ்க்கில் ராபர்ட் மாஸ்டர் தனது முதல் மனைவி மற்றும் மகள் குறித்து உருக்கமாக பேசி உள்ளார். அவர் கூறியதாவது : “எனது அம்மா, அப்பா இருவருமே டான்ஸ் மாஸ்டர்கள் தான். வீட்டில் கடைசி பையன் என்பதால் பெற்றோருக்கு என் மீது அதிகம் பாசம். ஆனால் சின்ன வயசுலயே எனக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டதால் எனக்கு கால் சரியாக வரவில்லை.
அதன் பின் எனது தந்தையின் முயற்சியால் தான் நான் அதிலிருந்து குணமாகி, நடனத்திற்குள்ளேயே வந்தேன். அதன்பின் என் வாழ்க்கையில் காதல் வந்தது. அந்த பெண்ணின் பெயரை சொல்ல விரும்பவில்லை. காதலிச்சு அவரை கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். எங்களுக்கும் ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்துச்சு. ஆனா குழந்தை பிறந்ததுமே நாங்க பிரிஞ்சிட்டோம், ஏன் அந்த முடிவெடுத்தோம்னு எனக்கு தெரியல. நான் சுத்தமாக படிக்காதவன், என்னுடைய மகளுக்கு நான் தான் அப்பானு தெரியுமா? தெரியதானு கூட எனக்கு தெரில. என்னைவிட்டு பிரிந்ததும் என் முதல் மனைவி இன்னொரு திருமணம் செஞ்சிக்கிட்டாங்க.
ஆனா என் மகளுக்கு நான் தான் அப்பானு நான் இறந்ததுக்கு அப்புறமாவது சொல்லுங்கனு எமோஷனலாக பேசி கண்கலங்கினார். தொடர்ந்து பேசிய அவர் “இந்த நிகழ்ச்சியை அவரும் பார்ப்பா, என்னப்பற்றி தெரிந்துகொள்வாள் என்பதற்காக தான் நான் இந்த ஷோவுக்கே வந்தேன். 2 வயசு வரை என் குழந்தையை பார்த்திருக்கிறேன். அததுக்கப்புறம் 7 வயதில் ஒருமுறை பைக்ல கூட்டி வந்தார் என்னுடைய முதல் மனைவி. அப்போ அவளுக்கு என்னை அடையாளம் தெரியல. அவ அம்மா என்னை பார்த்து ‘அங்கிளுக்கு ஹாய் சொல்லு’னு சொல்ல, என் மகளும் என்னை அங்கிள்னு கூப்பிட்டாள். அது மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியதாக ராபர்ட் மாஸ்டர் கூறினார்.