'எந்த நீல சட்டைக்காகவும் படம் எடுக்கல..' ப்ளூ சட்டை மாறனுக்கு ஆர்.ஜே.பாலாஜியின் பளீர் பதில் !

Rj balaji trolls blue sattai maaran via his latest video

RJ, காமெடியன், இயக்குனர், கிரிக்கெட் கமெண்டேட்டர், நடிகர், தொகுப்பாளர் போன்ற பல அவதாரத்தில் திரையுலகில் வலம் வருபவர் RJ பாலாஜி. 92.7 பிக் FM என்னும் ரேடியோ சேனலில் பணியாற்றியதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

அதனைத் தொடர்ந்து, நைட் ஷோ வித் RJ பாலாஜி, டேக் இட் ஈஸி, க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார்.

Rj balaji trolls blue sattai maaran via his latest video

இதன் பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜி, தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரவுடி தான், புகழ், வாயை மூடி பேசவும், காற்று வெளியிடை, வேலைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Rj balaji trolls blue sattai maaran via his latest video

மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம், வெள்ளம் போன்ற பிரச்சனைகளின் போது மக்கள் சார்பில் ஆதாரவு குரல் கொடுத்து தோள் கொடுத்து நின்றவர்.

இவரது பேச்சு மக்களால் மிகுதியாக ரசிக்கப்பட்டு வருகிறது.

Rj balaji trolls blue sattai maaran via his latest video

நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

Rj balaji trolls blue sattai maaran via his latest video

அதன்படி வீட்ல விசேஷம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Rj balaji trolls blue sattai maaran via his latest video

இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், ‘வீட்ல விசேஷம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

Rj balaji trolls blue sattai maaran via his latest video

கலாட்டாவான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. திருமண வயதில் இருமகன் இருக்கும் போது, ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார். தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.

இதனால், ஆர்.ஜே.பாலாஜியை பார்த்து ஊரே கலாய்ப்பது என காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Rj balaji trolls blue sattai maaran via his latest video

இப்படம் கடந்த 17ம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. வித்தியாசமான கதை, கலகலப்பான டயலாக் என மக்கள் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்நிலையில், விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ், கைதி படத்தின் reference வைத்து மல்டிவர்ஸ் மற்றும் கிராஸ் ஓவர் ஜானர் பாணியில் திரைக்கதை வடிவமைத்ததை போலவே, வீட்ல விஷேஷம் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி அமைத்திருந்தது அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Rj balaji trolls blue sattai maaran via his latest video

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு முன், ஆர்.ஜே. பாலாஜி தனது அப்பா, அம்மா மற்றும் குடும்பத்துடன் மருத்துவமனைக்கு அவசரமாக போகும்போது, அங்கு எல்.கே.ஜி வருகிறார் என்று சொல்லி ஆரவாரம் செய்வார்கள்.

இந்நிலையில், வீட்ல விசேஷம் படத்தில் எல்.கே.ஜி கேரக்டர் இடம் பெற்றுள்ளது மல்டிவர்ஸ் அல்லது கிராஸ் ஓவர் ஜானரை நினைவுபடுத்துவதாக கூறும் ரசிகர்கள் இந்த தகவலையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Rj balaji trolls blue sattai maaran via his latest video

வழக்கம் போல தன் ஸ்டைலில் வீட்ல விசேஷம் படத்தை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு ஆர்.ஜே.பாலாஜி வீடியோ பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் பல திரையரங்க உரிமையாளர்கள் வீட்ல விசேஷம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பை பற்றி சிறப்பாக பேசியுள்ளனர்.

அதன் பிறகு பேசிய ஆர்.ஜே.பாலாஜி, ‘இந்த படம் யாருக்காக எடுத்தோமோ அவர்களுக்கு பிடித்தால் மட்டும் போதும், எந்த நீல சட்டைக்கும் இப்படம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this post