எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் பிரகாஷ் தான் ஜெயம் ரவி அப்பா.. மீம்ஸை பகிர்ந்த ஜெயம்ரவி ! வைரலாகும் மீம்
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்று திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை, எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே, கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அசர வைத்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், ஜெயம் ரவியும் தந்தை - மகனாக நடித்துள்ளது குறித்து மீம்ஸ் மற்றும் ட்ரோல்கள் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் மீம்ஸ் ஒன்றை போட அதை ஜெயம் ரவியே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம், தற்போது பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் பிரகாஷ் ராஜ் - ஜெயம் ரவி இருவரது கதாபாத்திரங்களும் பெரிதும் பேசப்பட்டது. தற்போது நெட்டிசன்கள் பிரகாஷ்ராஜுக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே உள்ள ஒற்றுமையை வைத்து ஒரு மீம்ஸ் ஒன்றை போட்டிருந்தனர். அதை ஜெயம் ரவியே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிரகாஷ்ராஜை டேக் செய்து இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு தந்தையாக சுந்தர சோழனாக நடித்திருப்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இந்த படத்தில் தன் தந்தை சொல்ல மீறாமல் ஈழத்திலிருந்து தஞ்சைக்கு கிளம்பி, நடுக்கடலில் படகில் மாட்டிக் கொண்டு தண்ணீரில் மூழ்கி விடுவார் ஜெயம் ரவி. இதே போல தான் சந்தோஷ் சுப்பிரமணியன் படத்திலும் தன் தந்தை பேச்சை மீறாமல் இருப்பார். அதேபோல் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்திலும் தன் தந்தையின் பேச்சைக் கேட்டு பாக்ஸிங் பழகுவார்.
இதுபோல தொடர்ந்து தந்தை பேச்சை மீறாத ரோலில் ஜெயம் ரவியும், கண்டிப்பான தந்தையாக பிரகாஷ் ராஜையும் மூன்றாவது முறையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதை மூன்றையும் இணைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட அது எப்படியோ ஜெயம் ரவி வரை போய்விட்டது. அவரும் அதை ஷேர் செய்து பிரகாஷ்ராஜை டேக் செய்து பகிர்ந்திருக்கிறார்.
Hahaha @prakashraaj sir https://t.co/VBDwnHfv97
— Arunmozhi Varman (@actor_jayamravi) October 4, 2022