பிக்பாஸ்'ல் களமிறங்கும் வனிதாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய தமிழ் பிரபலம்.. இதென்ன புதுடுவிஸ்டா இருக்கு !

popular celebrity going to participate in biggboss6 tamil

பிரபல திரையுலக நட்சத்திரங்கள் விஜய குமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது சகோதரிகள் பிரபல நடிகைகள் ப்ரீதா, ஸ்ரீ தேவி, சகோதரர் நடிகர் அருண் விஜய்.

popular celebrity going to participate in biggboss6 tamil

2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் அவர்களை திருமணம் செய்தார் வனிதா. இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்னும் மகனும், ஜோவிகா என்னும் மகளும் உள்ளனர். ஆகாஷ் மற்றும் வனிதா கருத்து வேறுபாடு காரணமாக பிரியவே, ஸ்ரீ ஹரி தாத்தா விஜய குமார் மற்றும் தனது ஆகாஷ் அவர்களுடன் சென்றுவிட்டார்.

popular celebrity going to participate in biggboss6 tamil

பின்னர், வனிதா 2வதாக ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2012ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டனர். 2 மகள்களுடன் தனியே வசித்து வந்த வனிதாவுக்கு எந்த வித ஆதரவும் இல்லாமல் தனியே வாழ்ந்து வந்தார்.

popular celebrity going to participate in biggboss6 tamil

பின்னர், 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா. ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

popular celebrity going to participate in biggboss6 tamil

1995ம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தில் விஜய் ஜோடியாக வனிதா நடித்தார். அதனைத் தொடர்ந்து, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் போன்ற தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.

popular celebrity going to participate in biggboss6 tamil

பின்னர், சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் எழவே, திரைத்துறையில் இருந்து விலகி இருந்த வனிதா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி மிக பிரபலம் அடைந்தார்.

popular celebrity going to participate in biggboss6 tamil

தற்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல் தொடர்கள் என பங்கேற்று வரும் வனிதா, தனி யூடியூப் சேனல், துணி கடை, மேக் அப் ஆர்ட்டிஸ்ட் என பல அவதாரம் எடுத்து வருகிறார்.

popular celebrity going to participate in biggboss6 tamil

இந்நிலையில், விரைவில் தொடங்கவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சம்மந்தப்பட்ட நபர் ஒருவர் பங்கேற்க உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய ராபர்ட் மாஸ்டர், கடந்த சில ஆண்டுகளுக்கு நடிகை வனிதா உடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.

popular celebrity going to participate in biggboss6 tamil

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பேமஸ் ஆன போட்டியாளர் வனிதா. மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு அனைத்து போட்டியாளர்களுக்கும் tough கொடுத்தார். இந்நிலையில், தற்போது அவருடன் காதல் சர்ச்சையில் சிக்கிய ராபர்ட் மாஸ்டர் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post