இதுதான் டைட்டிலா ? எப்டி சொன்னாலும் கெத்தா இல்லயே டா.. வாரிசை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

இதனைத் தொடர்ந்து, இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழு வெளியிட்டது.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

அந்த அறிவிப்பில், இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் செட் அமைத்து பாடல் ஷூட்டிங் செய்தனர்.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

ஹைதராபாத் சென்ற தளபதி விஜய், மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா முதலமைச்சர் சந்தரசேகர் ராவ் அவர்களை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், விடியோக்களும் வைரலாக பரவி வந்தன.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே செட்டில் ஷூட் செய்யப்பட்டது. இதையடுத்து 2ம் கட்டமாக ஐதராபத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு மாத படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

இந்நிலையில், சூட்டிங் முடிந்து விஜய் சென்னை திரும்பியுள்ள புகைப்படம் வைரலாகி வந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது என விஜய் மற்றும் வம்சி இருக்கும் புகைப்படத்துடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 2ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

ஹைதராபாத்தில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், சென்னையில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ‘தளபதி 66’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து கசியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விஜய் மற்றும் குஷ்பூ ஆகியோரின் புகைப்படங்கள் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியானது.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

புதிய அப்டேட்டாக தெலுங்கில் தளபதி66 ‘வரசுடு’ என்றும் , தமிழில் ‘வாரிசு’ என்றும், தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் டோலிவுட் நடிகர் மகேஷ் பாபு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளுக்கு முன்னதாகவே, அதாவது நேற்று அதாவது ஜூன் 21ம் மாலை 6.01 மணிக்கு ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட போவதாக அறிவிப்பு வெளியானது.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

அதன்படி, தளபதி66 பெயர் ‘Varisu’ என அறிவிக்கப்பட்ட பர்ஸ்ட் லுக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதில் தளபதி விஜய் கோட் சூட் போட்டு செம ஸ்டைலாக அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். The Boss Returns என படக்குழு வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

இந்நிலையில், படத்தின் போஸ்டர் கூகுளில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் ஆதாரத்துடன் புகைப்படத்தினை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

பொதுவாக விஜய் படம் என்றாலே படத்தின் டைட்டில் மாஸாக இருக்கும். அந்த பெயரை ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள். விஜய் நடித்த மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட் என்று இந்தி மட்டும் ஆங்கில மொழியில் படு மாஸானா டைட்டிலுடன் வெளியாகி இருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் விஜய் படத்தின் டைட்டில் வெளியாகி இருந்தாலும் படத்தின் தலைப்பு ஏதோ ரசிகர்களுக்கு திருப்தியாக அமையவில்லை என்பது தான் உண்மை.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

இதனால் இந்த படத்தின் தலைப்பை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் இயக்குநர் வம்சி அளித்து இருந்த பேட்டியில், விஜயின் 66வது படம் ஆக்‌ஷன் படமாக இல்லாமல், சென்டிமென்ட் மற்றும் குடும்பங்கள் உணர்வுகள் நிரம்பிய வகையிலே திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி இருந்தார். இதை எல்லாம் பார்க்கும் போது தளபதி66 ஒரு பக்கா பேமிலி என்டர்டைன்மென்ட் படம் என்பது தெளிவாக தெரிகிறது.

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

Netizens trolling varisu title for not upto the level memes getting viral

Share this post