'காத்து வாங்கிய தியேட்டர்.. படம் பாக்க ஒருத்தர் கூட இல்ல..' ஏமாற்றமடைந்த நயன்தாரா..

nayanthara disappointed noone to watch connect movie in madurai theatre so cancelled the visit

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக புகழும் வரவேற்பும் கொண்ட இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கனெக்ட். விக்னேஷ் சிவன் - நயன்தாரா அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

nayanthara disappointed noone to watch connect movie in madurai theatre so cancelled the visit

ஹாரர் ஜானரில் உருவான இத்திரைப்படம் வித்தியாசமான கதையம்சத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நயன்தாரா சில பேட்டிகளில் பங்கேற்றிருந்தார். அதன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

nayanthara disappointed noone to watch connect movie in madurai theatre so cancelled the visit

இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக நயன்தாரா மதுரை வருவதாக இருந்து பின்னர் வரவில்லை என மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மதுரை ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த ஏமாற்றம் அடைந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் உண்மையாக நடந்தது இது தான்.

nayanthara disappointed noone to watch connect movie in madurai theatre so cancelled the visit

நடிகை நயன்தாரா மதுரையில் உள்ள திரையரங்கிற்கு சென்று படத்தை பார்க்க முடிவு செய்துள்ளார். ஆனால், நயன்தாரா புறப்படவிருந்த சமயத்தில், அந்த தியேட்டரின் உரிமையாளர், நயன்தாராவிற்கு போன் செய்து வரவேண்டாம் என்று கூறியுள்ளார். ஏனென்றால், படத்தை பார்க்க தியேட்டருக்கு ஒருவர் கூட வரவில்லை என்பதால் நயன்தாராவை வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால், நடிகை நயன்தாரா ஏமாற்றமடைந்துள்ளார்.

Share this post