அடிதூள்.. புதிய தொழிலை ஆரம்பிச்ச நயன்தாரா.. என்ன பிசினஸ்னு பாருங்க..!
நடிகை நயன்தாரா சினிமாவில் ஒரு பக்கம் நடித்து வந்தாலும் அடுத்த கட்டமாக பெண் தொழிலதிபராக ஜொலிக்க முயற்சி செய்து வருகிறார். அதனால்தான் நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு தொடங்கி சமீபத்தில் சரும பராமரிப்பு தொழிலை தொடங்கினார்.
இந்நிலையில், அடுத்ததாக பெண்களுக்கான சுகாதாரத்தை மேம்படுத்த அத்தியாவசிய நாப்கின் பேட்களை விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு உள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நாப்கின் பேட்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தனது நயன் பெயருடன் FEMI9 இன் “I’m proud” என தமிழில் தலைப்பு கொடுத்து அனைத்து பெண்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஜவான் படத்திற்கு பிறகு கமலின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நயன்தாரா நடிப்பில் மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.