16 ஆண்டுகளுக்கு பின் ரீ-எண்ட்ரி.. கோலிவுட்டில் 2வது இன்னிங்சை தொடங்கிய லைலா !

Laila to give reentry after 16 years in karthi sardhar movie

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் நடிகை லைலா பிதாமகன் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மற்றும் இவரது டயலாக் இன்றும் யாரும் மறக்க வாய்ப்பில்லை.

ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே போன்ற பல வெற்றித்திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

அஜித்துடன் பரமசிவன் மற்றும் திருப்பதி ஆகிய படங்களில் நடித்த லைலா, அதன்பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு, கடந்த 2006ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான மெஹ்தின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது நடிகை லைலா 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

Laila to give reentry after 16 years in karthi sardhar movie

அதன்படி கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரெஜிஷா விஜயன் நடித்து வருகினறனர்.

Share this post