KGF 2 படத்தை பார்த்து ரசித்த கமல்ஹாசன் & இளையராஜா.. வைரலாகும் புகைப்படங்கள்

Kamalhaasan and ilaiyaraja watched kgf 2 film in satyam cinemas

யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் அவர்களின் மிரட்டலான இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் 2 கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் மக்களின் பேராதரவை பெற்று பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படத்தில் யாஷ் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி மேலும், சஞ்சய் தத், ரவீனா டண்டன், சரண், ஈஸ்வரி ராவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

Kamalhaasan and ilaiyaraja watched kgf 2 film in satyam cinemas

கே.ஜி.எஃப் 2 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட்டதால், இதற்கு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்து வருகிறது. சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. விரைவில் 1000 கோடி வசூல் பெற்றுவிடும் என சொல்லப்படுகிறது.

Kamalhaasan and ilaiyaraja watched kgf 2 film in satyam cinemas

இப்படம் பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வரும் நிலையில், நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களும் கே.ஜி.எஃப் 2 படத்தின் சிறப்பு காட்சியை கண்டு ரசித்தனர்.

Kamalhaasan and ilaiyaraja watched kgf 2 film in satyam cinemas

அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவருக்கு படம் மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

Kamalhaasan and ilaiyaraja watched kgf 2 film in satyam cinemas

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி திரைக்கு வர நிலையில், அப்படத்துக்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post