70 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் ஜோ.. யார் அந்த நடிகர் தெரியுமா? வெளியான ஷாக்கிங் அப்டேட்
நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட பிரபல ஜோடி சூர்யா - ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.
2006ம் ஆண்டு இவர்கள் திருமணத்திற்கு முன்னர் இணைந்து நடித்து வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இருவீட்டாரின் பெயரில் சம்மதம் பெற்று திருமணம் செய்தனர். இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்து வருகிறார் ஜோதிகா.
திருமணத்துக்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் நடித்தார்.
இந்நிலையில், இவர் அடுத்ததாக மலையாளத் திரையுலகில் 70 வயதாகும் நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக ஜோ பேபி என்ற இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.