’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் - வரி விலக்கு.. படம் பார்க்க காவல்துறைக்கு லீவ்.. பிரதமரின் பாராட்டு..

Huge praise for the film the kashmir files from pm modi

கடந்த வாரம் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி மாஸ் காட்டி வரும் இந்தித் திரைப்படம், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’.

Huge praise for the film the kashmir files from pm modi

காஷ்மீரில் 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து உயிர்பயத்துடன் தப்பிய சம்பவங்களையும் வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 90களில் காஷ்மீர் இந்துக்கள் எதிர்கொண்ட வலி மற்றும் போராட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் படத்தை அதிகமான மக்கள் பார்க்க வேண்டும் என்பதால் வரி விலக்கு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தைப் பார்ப்பதற்காக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில அறிவித்துள்ளது.

இந்நிலையில், பீகார், டெல்லி மாநிலங்களிலும் இப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்து வரும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்து பாராட்டியுள்ள பிரதமர் மோடி துணிச்சலுடன் உருவாக்கியதற்கு இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

Huge praise for the film the kashmir files from pm modi

“தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து பாலிவுட் வட்டாரங்களில் நிலவும் மயான அமைதியை கவனியுங்கள். இப்படம் ஒவ்வொரு கட்டுக்கதையையும் உடைத்துள்ளது. இந்த வருடத்தின் வெற்றிகரமான மற்றும் லாபம் ஈட்டும் படமாக இருக்கும்.

இப் படத்துக்கு எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை. வசூல் குறித்து எந்தவிதமான போலி கணக்குகளும் வெளியாகவில்லை. தேச விரோத மாஃபியாக்களின் செயல்திட்டங்கள் இல்லை” என கூறியுள்ளார்.

Huge praise for the film the kashmir files from pm modi

Share this post