உலக நாயகனுக்காக அவரது ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ !

Fans made floating art for kamal haasan viral video

களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நம் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.

Fans made floating art for kamal haasan viral video

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர். 4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம்.

Fans made floating art for kamal haasan viral video

கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

Fans made floating art for kamal haasan viral video

இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 300 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது.

Fans made floating art for kamal haasan viral video

விரைவில் இப்படம் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. படம் வெளியாகி பல நாள் ஆன நிலையிலும், இப்படத்தின் vibes இன்னும் குறையவில்லை என்பதே உண்மை. இந்நிலையில், கமல் ரசிகர்கள் பல விதத்தில் தங்கள் ஈர்ப்பை காட்டி வருகின்றனர்.

Fans made floating art for kamal haasan viral video

அந்த வகையில், மூணாரில் உள்ள பிரபல ரிசார்ட்டில், நீச்சல் குளத்தில் கமல் ஹாசன் அவர்களின் உருவப்படத்தை பேப்பர் மூலம் வரைந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

Share this post