'Don' தொடர்பான அறிவிப்பை 'குறும்படம்' போட்டு வெளியிட்ட படக்குழு.. வைரல் வீடியோ !

Don is going to be released on netflix latest video getting viral

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Don is going to be released on netflix latest video getting viral

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Don is going to be released on netflix latest video getting viral

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

Don is going to be released on netflix latest video getting viral

தற்போது, இவர் நடிப்பில், SK20 திரைப்படத்தின் பெயர் Prince என பர்ஸ்ட் மற்றும் 2வது லுக் வெளியிடப்பட்டுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

Don is going to be released on netflix latest video getting viral

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான்.

Don is going to be released on netflix latest video getting viral

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Don is going to be released on netflix latest video getting viral

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

Don is going to be released on netflix latest video getting viral

வெளியாகி 12 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகெங்கும் திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்தது. இப்போதும் சில திரையரங்குகளில் ’டான்’ திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

Don is going to be released on netflix latest video getting viral

டான் திரைப்படத்தின் சக்ஸஸ் மீட், 25வது நாளை முன்னிட்டு வெற்றிவிழா அனைத்தும் நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ஒரு குறும்படம் வெளியிட்டுள்ளனர். அதில் டான் திரைப்படம் Netflix’ல் ஸ்ட்ரீம் ஆவதை அறிவித்திருந்தனர்.

Share this post