கைய புடி.. கண்ணு பாரு.. மிருணாள்வுடன் தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகையின் காதலர்..!
வளர்ந்து வரும் நடிகைகளின் மிருணாள் தாகூரும் ஒருவர். இவர் சீதாராமன் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். இவர் சமீபத்தில், லவ் சோனியா என்ற படத்தில் விபச்சார பெண்களிடம் சிக்கி அக்காவை காப்பாற்ற போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், ஒரு கட்டத்தில் அவரும் விபச்சார கும்பலிடம் மாட்டி அதிலிருந்து எப்படி விடுபடுகிறார் என்ற கதையில் நடிக்க, நேரடியாக விபச்சாரம் செய்யும் பெண்களிடம் சென்று அவர்களை குறித்து அறிந்து கொண்டார்.
இந்நிலையில், தற்போது அரை டஜன் அளவிலான படங்களை கையில் வைத்துள்ளார் மிருணாள். தற்போது, விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஃபேமிலி ஸ்டோர் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த பட குழுவினர் தீபாவளி கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் செமயாக கலாய்க்க துவங்கிவிட்டனர்.
அதாவது, விஜய் தேவரகொண்டாவின் காதலி பிரபல நடிகை என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த புகைப்படத்தை பார்த்து செம கோபமாக போகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றன.