தனுஷ் - செல்வராகவன் காம்போ.. நானே வருவேன் - மிரட்டலான டீசர் வீடியோ !
கோலிவுட், ஹாலிவுட், டோலிவுட், பாலிவுட் என பெரிய ஹீரோவாக மாறியுள்ள நடிகர் தனுஷ், தனது சகோதரர் செல்வராகவன் உடன் 4வது முறையாக இணைந்து பணியாற்று திரைப்படம் ‘நானே வருவேன்’. 3 வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி, இப்படத்தை உருவாக்கி வருகிறது.
11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன் அண்ணனுடன் சேர்ந்துள்ள தனுஷ் நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். மேலும், யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இப்படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும், இவர்களுடன், இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவு பெற்று, தற்போது, அதன் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ரசிகர்கள் இந்த டீசரை தாறுமாறாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.