திருமண கோலத்தில் பிக் பாஸ் வருண் - அக்ஷரா.. வைரலாகும் போட்டோஸ் & வீடியோ !

Biggboss akshara reddy and varun couple photoshoot for magazine

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது OTT தளத்தில் BB அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

ராஜு,பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப், தாமரை, சிபி, சஞ்சீவ், வருண், அக்ஷரா, அபிநய்,அபிஷேக், இய்க்கி, இசைவாணி, மதுமிதா, சுருதி, சின்னபொண்ணு, நாடியா, நமீதா போட்டியாளர்களுடன் சீசன் 5 பிரமாண்டமாக துவங்கியது. இதில் விஜய் டிவி புகழ் ராஜு வெற்றி பெற்றார்.

Biggboss akshara reddy and varun couple photoshoot for magazine

பிரியங்கா 2வது இடத்தையும், பாவனி 3வது இடத்தையும், அமீர், நிரூப் ஆகியோர் 4 மற்றும் 5வது இடத்தை பிடித்தனர். இந்நிகழ்ச்சியில், அக்ஷரா, வருண் இருவரும் ஒரே நேரத்தில் எலிமினேட் ஆகினர். பின்னர் தற்போது நல்ல நண்பர்களாக உலா வருகின்றனர்.

சிலர், வருண் - அக்ஷ்ரா நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அவர்கள் அதை பற்றி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பு இருவரும் அடிக்கடி வெளியே சந்திப்பது, போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவது என இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது, வருண் - அக்ஷ்ரா இருவரும் சேர்ந்து திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படம் பார்த்த நெட்டிசன்கள் இருவரின் ஜோடிப்பொருத்தம் நன்றாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். பிரபல மாத இதழுக்கான விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளதாக தெரிகிறது.

Share this post