'MLAவோட மருமகன் நான்.. அதுனால தான் விக்ரமன் என்ட பேசமாட்றான்' அசீமின் பேச்சால் வெடித்த சர்ச்சை
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்பித்து முழுதாக 1 வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. அப்படி இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் ரேங்கிங் டாஸ்க் நடைபெற்ற சமயத்தில் அசீமுக்கு 13வது இடம் கொடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், ஆயிஷா, விக்ரமன் ஆகியோரெல்லாம் தகுதியே இல்லாதவர்கள் என பேசி இருந்தார். விக்ரமன் எப்போது தூங்கிக் கொண்டு இருப்பதால் அவர் ஆறாவது இடத்தில் நிற்க தகுதி இல்லாதவர் என கூறினார் அசீம். உடனே நீ என்ன வேலை பண்ணீருக்க என விக்ரமன் கேட்க, யோவ் என குரலை உயர்த்தினார் அசீம்.
இதனால் கடுப்பான விக்ரமன் யோவ்னுலாம் பேசாத என சொல்ல, அதற்கு அசீம், அப்படி தான் டா பேசுவேன், வேலைய பாருடா போடா என தரக்குறைவாக பேசினார். இதனால் டென்ஷன் ஆன விக்ரமன், நீ வாட்ல இளவரசன் மாதிரி வர்ற எல்லாரையும் வாடா போடானு சொல்ற என தட்டிக் கேட்க. பதிலுக்கு அசீம், வெள்ளை சட்டை போட்டா நீ என்னடா அரசியல்வாதினு சொல்லிட்டு இருக்க என சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் அங்கிருந்த சக ஹவுஸ்மேட்ஸ் அவர்களை சமாதானப்படுத்தும் காட்சிகள் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன. இதன்மூலம் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய சண்டை காத்திருக்கிறது என்பது தெரிகிறது.
இப்படி இருக்கையில், விக்ரமன் தன்னிடம் பேச தயங்குவதற்கான காரணம் குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசிய அசீம், தான் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த காட்சிகளெல்லாம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படாவிட்டாலும், லைவ் ஸ்டிரீமிங்கில் ஒளிபரப்பாகி உள்ளன. அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
அவர் பேசியதாவது : “என் அம்மாவோட தம்பி ஒரு MLA. அந்த கட்சில விக்ரமன் ஒரு உறுப்பினர். அவன் இருக்க கட்சில என் மாமா தான் துணைப் பொதுச்செயலாளர். அதனால தான் அவன் என்கிட்ட பேசமாட்றான்” என கூறியுள்ளார். விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆளூர் ஷானவாஸ் தான் அசீமின் மாமா என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.
அதேபோல் விக்ரமன் நடித்த சீரியல் 40 எபிசோடுகளுடன் முடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அவன் ஒரு சீரியல் ஆர்டிஸ்ட் எனவும் அந்த வீடியோவில் அசீம் பேசி உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், உங்க மாமா MLA என்றால் விக்ரமன் உனக்கு கொத்தடிமையாக இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி வருவதோடு அசீமை திட்டியும் பதிவிட்டு வருகின்றனர். இன்றைய எபிசோடில் அசீமுக்கும் விக்ரமனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதால், அப்போது என்னவெல்லாம் பேசி இருக்கிறார்களோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Azeem all that this video shows is your own incompetence and supreme jealousy on #Vikraman. Ugh !!!pic.twitter.com/iJKUdkeQDn
— Singoolarity (@singoolarity) October 21, 2022
#Day12 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/LtjwX1zi7i
— Vijay Television (@vijaytelevision) October 21, 2022