அச்சு அசல் 'அரபிக் குத்து' பாடலை அதே காஸ்டியூமில் நடனம் ஆடி அசத்திய ரசிகர்கள்.. வீடியோ இதோ

Arabic kuthu song replicated by fans look alike video getting viral

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கிய திரைப்படம் தான் பீஸ்ட். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, சதிஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

Arabic kuthu song replicated by fans look alike video getting viral

முதல் 2 திரைப்படங்களை போலவே, பீஸ்ட் படத்திலும் டார்க் காமெடி மற்றும் ஆக்‌ஷனை கொடுத்திருந்தார் நெல்சன் இருந்தாலும் இப்படத்தில் அது ஒர்க்-அவுட் ஆகவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை விஜய் ரசிகர்கள் வெறித்தனமான கொண்டாடினாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என பலரும் கருத்தை கூறி வருகின்றனர்.

Arabic kuthu song replicated by fans look alike video getting viral

பல லாஜிக் இல்லாத சீன்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் சிலர் கலாய்த்து வந்தனர். இப்படம் 1 மாதம் கூட முழுமையாக திரையரங்குகளில் ஓடாத நிலையில், OTT தளத்தில் ரிலீஸ் ஆனது. இதனால், மீண்டும் சில சீன் வீடியோக்களை பதிவிட்டு கலாய்த்து வருகினறனர்.

Arabic kuthu song replicated by fans look alike video getting viral

அந்த வகையில், கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் விமானத்தை இயக்கும் வீடியோ பதிவிட்டு மிகுந்த பேச்சு பொருளாக மாறியது. மேலும், தற்போது விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலிப்குமாரை ட்ரோல் மீம்ஸ் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

Arabic kuthu song replicated by fans look alike video getting viral

இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையமைத்த அரபிக் குத்து பாடல் இணையத்தில் சாதனை படைத்துள்ளது. இதில் இடம்பெற்ற அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா, திரை தீ பிடிக்கும் போன்ற பாடல்கள் ரசிகர்கள் பிடித்த வண்ணம் அமைந்துள்ளது.

Arabic kuthu song replicated by fans look alike video getting viral

அதிலும், அரபிக் குத்து பாடல் யூடியூபில் ரெக்கார்ட் பிரேக் செய்யும் அளவிற்கு பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. தற்போது, இந்த பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து நடனமாடியது போலவே, அச்சு அசல் அப்படியே நடனம் ஆடி ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த வீடியோவை பார்த்து ஷாக்கான பலரும், தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்து, வைரலாக்கி வருகின்றனர்.

Share this post