'எல்லாத்தையும் விட பெரிய தண்டனை.. தான் யாருன்னு தனக்கே தெரியாம இருக்கிறது'.. 'ஜான்சி' டிரைலர்
இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக 2007ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பின்னர், இவர் நடித்த ‘அங்காடி தெரு’ படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. தமிழில், சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டிவிட்டு ஐதராபாத்’ல் செட்டில் ஆனார். சிறிய இடைவெளிக்கு பின்னர் சிங்கம் 2 படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டும் குத்தாட்டம் போட்டார்.
பின்னர், நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கிய அஞ்சலி, நாடோடிகள் 2 படத்தில் நடித்தார். தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கிய நிலையில், ‘பாவக்கதைகள்’ ‘நிசப்தம்’, ‘நவரசா’ உள்ளிட்ட சீரிஸ்களில் நடித்து வந்த நிலையில், அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில், போட்டோக்கள், வீடியோக்கள் என அப்லோட் செய்து வருகிறார். தற்போது, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். மேலும், பிரபல தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவான ‘மச்சேர்லா நியோஜகவர்கம்’ என்ற படத்தில் நடிகை அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.
தற்போது, தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கத்தில் ஜான்சி என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார். அவருடன் சாந்தினி சவுத்ரி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, சம்யுக்தா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தத் தொடரில், ஜான்சி என்ற கேரக்டரில் நடித்துள்ள அஞ்சலி தனது பழைய நினைவுகளை மறந்து விடுகிறார்.
அவர் தற்போது கணவர், குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு பழைய ஞாபகம் வருகிறது .அப்போது அவர் யார்? அவரது எதிரிகள் யார்? என்பது தெரிய வருகிறது. இதனை அடுத்து நடைபெறும் பரபரப்பான சம்பவங்கள் தான் இந்த தொடரின் மீதி கதை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த தொடர் இன்று முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.