Valimai Dialogue: சூப்பர் ஸ்டாரை கலாய்கிறதா வலிமை படத்தில் வரும் அஜித்தின் வசனம்.. கிளம்பும் புது சர்ச்சை..

Ajith dialogue in valimai creates sensation for rajini political speech

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, குக் வித் கோமாளி புகழ், வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்து நேற்று வெளியான வலிமை திரைப்படம் பிரபலமாக ஓடி வருகிறது. 3 வருடத்திற்கு மேலான காத்திருப்பிற்கு பின்னர், வெளிவந்துள்ள இத்திரைப்படம் பெரும் வசூல் மற்றும் வரவேற்பு ரீதியான வெற்றியையும் பெற்று வருகிறது.

யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ளனர். பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பல்வேறு சாதனைகளை படைக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Ajith dialogue in valimai creates sensation for rajini political speech

இந்நிலையில், வலிமை படத்தில் அஜித் வசனம் ஒன்று புது சர்ச்சையை கிளப்பி உள்ளது. படத்தில் தனது தம்பி மீது அஜித் நடவடிக்கை எடுக்கும் போது, அவரது தாய் கோரிக்கை முன் வைப்பார்.

Ajith dialogue in valimai creates sensation for rajini political speech

அப்போது அஜித் கூறும்போது, ‛சிஸ்டம் சரியில்லைனு.. நாம தான் சொல்றோம்.. ஆனா, நமக்குனு ஒரு விஷயம் நடக்கும் போது, நமக்கு சாதகமா பேசுறோம்.. சிஸ்டம்ங்கிறது யாரு? நாம தான் சிஸ்டம்’ என அவர் கூறியிருப்பார்.

இது ரஜினியை கலாய்க்கும்படி இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சியில் இருந்த போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‘தமிழக அரசியல் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. இங்கு சிஸ்டம் சரியில்லை. மொத்தத்தையும் சரி செஞ்சா தான் தமிழகம் உருப்படும்’ என பேசியிருந்தார்.

இப்படி பேசிவிட்டு அரசியலுக்கும் வராத ரஜினி, சிஸ்டத்தையும் சரி செய்யவில்லை. இதனை கலாய்க்கும் வகையில் வலிமை படத்தில் அஜித் வசம் இருப்பதாக புது சர்ச்சை வெடித்துள்ளது.

Share this post