Viral Video: முகம் சுளிக்க வைத்த பாவனாவின் டிரஸ்.. சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த பாவனா !
பிரபல cinematographer பாலச்சந்திரன் மற்றும் புஷ்பா அவர்களது மகள் பாவனா, இவரது இயற்பெயர் கார்த்திகா மேனன். நம்மல் என்னும் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர்.
இதன் மூலம், 5 வருடங்களில் கிட்டத்தட்ட 20 திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மொழியில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின்னர், கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஆர்யா, அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதன் நடுவே, 2017ம் ஆண்டு, பாலியல் ரீதியான சம்பவத்தில் சிக்கிய பாவனா, நீண்ட நாள் நடிப்பை விட்டு விலகியிருந்தார்.
தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள பாவனா, Ntikkakkakkoru Premandaarnnu என்னும் மலையாள மொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தனது மாடர்ன் ஸ்டைலிஷ் போட்டோக்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வரும் இவர், சில விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் பொது இடங்களுக்கு வந்து செல்கிறார்.
இந்நிலையில், தற்போது, பாவனாவுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா வழங்கி இருக்கிறது. இந்த விழாவில் நடிகை பாவனா கலந்து கொண்டு கோல்டன் விசாவை பெற்று இருக்கிறார். மேலும், இவர் அணிந்திருந்த ஆடை தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அவர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவில், பாவனா அணிந்த ஆடைக்குள்ளே எந்த உடையும் அணியவில்லை என்பது போல தெரிய, பலர் விமர்சித்து கமெண்ட் போட்டு இருந்தார்கள்.
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாவனா அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியது, “எனது அன்புக்குரியவர்கள் காயமடையாமல் இருக்கவும், ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்றும் நான் முயற்சித்து கொண்டிருக்கும்போது எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிப்பவர்கள் இருப்பதை அறியும்போது எனக்கு வேதனை அளிக்கிறது.
இதுபோன்ற செயல்கள் மூலம் தான் அவர்கள் சந்தோசம் காண விரும்பினால் நான் அவர்களைத் தடுக்கவில்லை” என்று மன வேதனையுடன் பாவனா கூறி இருக்கிறார். மேலும், கை உயர்த்தும்போது தெரிந்தது உடல் அல்ல. அந்த உடையில் டாப்புடன் ஸ்லிப் என்ற பகுதியும் சேர்ந்துதான் வருகிறது. ஸ்லிப் என்பது உடலின் நிறத்தில் உடலுடன் சேர்ந்து இருக்கும் டாப்பின் ஒரு பகுதிதான். இது புதிய கண்டுபிடிப்பு ஒன்றும் இல்லை. அந்த ஆடையை பயன்படுத்தியவர்களுக்கு அது தெரியும். டாப் மட்டும் அணிந்துகொண்டு வெளியே போகும் நபர் அல்ல நான். எது கிடைத்தாலும் அதை வைத்து என்னை வேதனைப்படுத்தும் சிலர் உள்ளனர் என் தெரிவித்துள்ளார்.
#Bhavana #BhavanaMenon pic.twitter.com/8N8K40jSpn
— Dominic Dom (@Dommtoretto2) September 22, 2022