தம்மாத்துண்டு ரோல்? இதுக்கா அவ்ளோ பில்டப்.. லோகேஷை பங்கம் பண்ணிய மன்சூர் அலிகான்..!

actor mansoor ali khan invited lokesh kanagaraj to fight in palestine war

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில், எதிர்மறையான விமர்சனங்களும் உள்ளன.

actor mansoor ali khan invited lokesh kanagaraj to fight in palestine war

இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சாண்டி, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனால் அவர்களின் பங்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனமும் பொதுவெளியில் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்த மன்சூர் அலிகான் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே தோன்றினார். படத்தில் ஒரு முக்கியமான இடத்தில் அவருடைய கதாபாத்திரம் கொண்டுவரப்பட்டாலும், அந்த கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. படம் வெளியாவதற்கு முன்பே மன்சூர் அலிகானின் கேரக்டருக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

actor mansoor ali khan invited lokesh kanagaraj to fight in palestine war

முதலில் மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் கைதி கதையை எழுதியது தான் இதற்கு காரணம் என்று கூறியிருந்தார் லோகேஷ். அந்த அளவுக்கு மன்சூர் மீது நம்பிக்கை இருந்ததால் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பேசிய மன்சூர் அலிகான், “ஒரே ஆண்டில் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து, 500 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1000 கோடி வசூலிக்க பாடுபடுகிறோம்! ஆனால், அரசியல்வாதி கையெழுத்து போட்டு 10,000 கோடி, 20 ஆயிரம் கோடி ஆட்டைய போடுறாங்க.

actor mansoor ali khan invited lokesh kanagaraj to fight in palestine war

அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம் இல்ல அதைவிட்டு தம்மா தூண்டு ரோலுக்கு அம்மா பெரிய பில்டப்.. இல்லைன்னா வாங்க பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம். 500 மில்லி டேங்கர் 500 ஆயுதமேந்திய விமானங்களை வாங்குங்க.. எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சுட்டு வரலாம். அப்பாவிங்க சாகறாங்க… சும்மா, டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில குடுத்துக்கிட்டு, வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ்!” என தெரிவித்துள்ளார்.

Share this post