போரினால் ஏற்பட்ட அவலநிலை ! அன்றாட உணவுக்காக சண்டையிடும் உக்ரேனிய மக்கள் !

Ukraine people longs for food due to russia war

ரஷ்யா உக்ரைன் இடையே 16வது நாளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், படிப்புக்கும் வேலைக்கும் உக்ரைன் சென்ற மக்கள் தங்கள் தாய் நாடு திரும்பி வருகின்றனர்.

போர் காரணமாக பல லட்சம் மக்கள் வாழ்விடங்களை விட்டுவிட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சுமார் 4½ லட்சம் பேர் வாழும் மரியுபோல் நகரம், ரஷிய படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களால் அந்த நகரவாசிகள் உணவுக்காகவும், எரிபொருளுக்காகவும் வீதிகளில் அலைந்து வருகின்றனர்.

அதோடு உணவுக்காக ஒருவருக்கொருவர் சண்டையிடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மருந்துகடைகளை மக்கள் சூறையாடி பொருட்களை அள்ளி சென்றதால் அவை காலியாக கிடக்கின்றன.

அந்த நகரில் காய்கறிகள் கள்ளசந்தையில் விற்கப்படும் நிலையில் மாறியுள்ளன. பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ள கார்களில் இருந்து மக்கள் பெட்ரோலை எடுத்து செல்கின்றனர்.

அங்கு பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, செல்போன் சேவையும் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

Share this post