ஸ்கூல் அட்மிஷன் முறையில் மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

School admissions has been changed by directorate

எல்.கே.ஜி முதல் 9-ம் வகுப்புகளில் இறுதி தேர்வு நடைபெறும் வரை மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

School admissions has been changed by directorate

பொதுவாக, பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் ஜூன் முதல் மார்ச் வரை ஒரு கல்வியாண்டு என சொல்லப்படும். இதனால், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெரும்பாலும் செப்டம்பர் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

School admissions has been changed by directorate

ஆனால் தற்போது பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய நடைமுறைபடி நடப்பாண்டில் இறுதி தேர்வு நடக்கும் வரை எல்கேஜி முதல் 9 ம் வகுப்பு வரையில் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கலாம் என்று அறிவித்துள்ளார் கல்வி ஆணையர் நந்தகுமார்.

மேலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7,8,9 ம் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கச் சொல்லி மாவட்ட கல்வி அலுவலர்கள் கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, 9ம் வகுப்பு வரை இந்த ஆண்டும் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

Share this post