உக்ரைன் தலைநகர் கீவ்வில் அடுத்த 36 மணி நேரத்திற்கு பொதுமுடக்கம் அமல் !

Ukraine capital keev city has been announced with curfew for next 36 hours

கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர், இன்று 20வது நாளாக நடந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது.

இப்போரை மக்கள் நலன் கருதி நிறுத்த பல நாடும் எதிர்ப்பு தெரிவித்தும், பல நாடுகள் சமரசம் பேச முயற்சித்தும் வருகின்றன. ஆனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வரும் நிலையில், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் பாரபட்சம் இன்றி தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் முழுவதும் இன்று (செவ்வாய்) இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

ரஷிய படைகள் கீவ் நகர் நோக்கி நெருங்கி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this post