மாதவிடாய்.. சிறுநீர் கழிப்பது.. கல்வி மேலாண்மை ஆப்பில் இடம்பெற்றுள்ள கேள்வி: அதிர்ச்சியில் ஆசிரியர்கள் !

Tn emis app contains question regarding period cycle and urine infection which shocks teachers and students

பள்ளிக் கல்வித் துறை மேம்பாட்டிற்காக சமீபத்தில் நிறுவப்பட்ட ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை மின்னணு தள செயலி ஆசிரியர்களை திண்டாட வைத்து வருகிறது. இதில் மாணவர்கள் படிப்பு மற்றும் இன்றி அவர்கள் நலன் சார்ந்து பல கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பூர்த்தி செய்வது தனி ஒரு வெளியாக ஆசிரியர்களுக்கு மாறிவிட்டது.

Tn emis app contains question regarding period cycle and urine infection which shocks teachers and students

இதனால் பாட நேரத்தை நேரத்தை விட, எமிஸ் செயலி தளத்தில் , ஆசிரியர்கள் பல மணி நேரம் மூழ்கி விடுகின்றனர். இதன் ஒரு கட்டமாக, மாணவ - மாணவியரிடம் எட்டு வகைகளில், 64 கேள்விகளுக்கு தினமும் பதில் பெற்று பதிவு செய்யுமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதில் சில கேள்விகளுக்கு மாதம் ஒரு முறையும், சில கேள்விகளுக்கு தினமும் பதில் பெற வேண்டும். உதாரணத்திற்கு, கால்கள் அல்லது பாதம் வளைந்து இருக்கிறதா, மிகவும் குள்ளமாகவோ, எடை குறைவாகவோ உள்ளனரா, காலை மற்றும் இரவில் என்ன உணவு, பள்ளிகளில் தரும் கலவை சாதத்தில் எது பிடிக்கும் போன்ற பல கேள்விகளுக்கும் பதில் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Tn emis app contains question regarding period cycle and urine infection which shocks teachers and students

இதில் பாலியல் பிரச்னைகள் அதிகரித்துள்ள இந்த காலத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சில கேள்விகள் ஆசிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாணவியரிடம் மாதவிடாய் ஒழுங்காக வருகிறதா, மாதவிடாயின் போது உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா என்ற கேள்விக்கு பதில் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, மாணவர்களிடம் ‘குட்கா’ பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா என கேட்டு பதில் தர வேண்டும் எனவும், மாணவ -மாணவியரிடம் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் உள்ளதா என்றும் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tn emis app contains question regarding period cycle and urine infection which shocks teachers and students

இந்த கேள்விகளால், மாணவியர் மற்றும் ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் மாதவிடாய் பிரச்னைகளை தாயிடமும், மருத்துவரிடமும் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் நமது அன்றாட வாழ்வில், பொது இடத்தில் கேள்வி கேட்பது, மாணவியரை பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஆசிரியைகளால், மாணவர்களை பார்த்து சிறுநீர் கழித்தல் தொடர்பான கேள்விகளை கேட்க முடியுமா? பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளால் பெரும் சர்ச்சைகளை உருவாகும் என சாட்டுகின்றனர்.

Share this post