தக்காளி கிலோ ரூ.2க்கு விற்பனை ! வேதனையில் சாலையில் தக்காளியை கவிழ்த்தி சென்ற விவசாயிகள்

Tomato price has been drastically came down which disappoints farmers

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளன. எனினும், வர்த்தகர்களோ அல்லது மக்களோ இதனை வாங்க போதிய ஆர்வம் காட்டவில்லை. தக்காளி அதிகளவில் வந்து குவிந்துள்ள நிலையில், அதன் விலை கடும் வீழ்ச்சி வீழ்த்தி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஒரு கிலோ தக்காளி ரூ.2க்கு விற்பனை செய்யப்படுவதால், தக்காளி பயிர் செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலை வீழ்ச்சி, நஷ்டம் போன்ற வேதனையில் விவசாயிகள் கொண்டு வந்த தக்காளி பெட்டிகளை சாலையில் கவிழ்த்து விட்டபடி சென்றுள்ளனர்.

தக்காளி விளைச்சல் அமோக அளவில் இருந்தபோதும், அதற்கான விற்பனை விலை குறைந்துள்ளது விவசாயிகளை அதிருப்திபடுத்தியுள்ளது. இதனால், தக்காளிகளை அரசே கொள்முதல் செய்து வேறு வகைகளில் அவற்றை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this post