தங்கம் வாங்குற பிளான் இருக்கா அப்போ உடனே கிளம்புங்க: ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைவு..!!

Tamilnadu Gold Price Decrease Today Gram Rate Sliver

உக்ரைன் ரஷ்யா போரினால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கத்தின் விலை கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்தே உயரத்தொடங்கியது. குறிப்பாக பிப்ரவரி 22ம் தேதி ரூ.38 ஆயிரமாகவும், மார்ச் 7ம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக குறைந்து வரும் நிலையில், இன்றும் சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.38,336க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து, கடந்த 20 நாட்களாக உயர்வதும், குறைவதுமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

மேலும், ஒரு கிராம் தங்கம் ரூ.27 குறைந்து, ரூ.4,792க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 குறைந்து, ரூ.67.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1100 குறைந்து, ரூ.67,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை தற்போது சற்று குறைந்திருப்பது நகை வாங்குவோரிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Share this post