அட அது வெள்ளி கொலுசே இல்லையாமே.. இதுல கூட ஏமாத்துவீங்களா..

Kolusu given for vote is identified as fake silver by testing in centre

நாளை அதாவது 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், நேற்றோடு பிரசாரம் நிறைவடைந்தது. அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட போதிலும், வாக்காளர்களை போட்டி போட்டுகொண்டு முக்கிய அரசியல் காட்சிகள் காசு, பணம், பரிசு பொருட்கள் என வழங்கி வருகின்றனர்.

‘ஹாட்பாக்ஸ்’, சேலை, கொலுசு, 1,000 ரூபாய் அல்லது, 2,000 ரூபாய் என விதவிதமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஓட்டுக்கு பணம் கொடுத்ததை விட கொலுசு வழங்கியதை பெரிதும் பெண்கள் மத்தியில் பேசுகின்றனர்.

கொலுசு கொடுக்காத வார்டுகளில் பெண்கள் அக்கட்சி கிளை அலுவலகங்களை முற்றுகையிட்டு ‘பூத் சிலிப்’ காட்டி, கொலுசு கொடுக்கச் சொல்லி கேட்டு வருகின்றனர்.

ஆனால் அந்த கொலுசு தரம் குறைந்தது, 16 சதவீதமே வெள்ளி உள்ளது என பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை, நேற்றைய பிரசார கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, வாக்காளர்களுக்கு வழங்கிய, ஒரு செட் கொலுசை, கோவையில் உள்ள தனியார் தரப்பரிசோதனை மையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்நிறுவனம் வழங்கிய ஆய்வறிக்கையில், ஒரு கொலுசில், வெள்ளி - 27.10 சதவீதம், தாமிரம் - 62.15, துத்தநாகம் - 10.75 சதவீதம் இருந்தது. மற்றொரு கொலுசில், வெள்ளி - 3.66 சதவீதம், தாமிரம் - 85.14 சதவீதம், துத்தநாகம் - 14.20 சதவீதம் இருந்தது எனவும், வாக்காளர்களுக்கு வழங்கிய கொலுசு வெள்ளி அல்ல; வெள்ளி முலாம் பூசப்பட்டது என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

Kolusu given for vote is identified as fake silver by testing in centre

இதனை அறிந்த பெண்கள், அக்கட்சியை வசை பாடியும், அதன் சமந்தப்பட்ட காட்சியாட்களை நியாயம் கேட்டும் வருகின்றனர்.

Share this post