கொடைக்கானலில் மளமளவென பரவி வரும் காட்டுத்தீ ! படர்ந்த புகைமண்டலம் !

Kodaikanal fire spread in tree and forest areas in getting larger day by day

தமிழகத்தில் சுற்றுலா தளமாக மக்கள் அதிகம் விரும்பி பயணிக்கும் இடங்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, வால்பாறை. அந்த வகையில், மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தான் அரிய வகை மரங்கள், மூலிகைச்செடிகள் , பழமையான மரங்களும் நிரம்பியுள்ளதாக தகவல்கள் கூறிவருகிறது.

மேற்குதொடர்ச்சி பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தில் இதமான வானிலை காரணமாக சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. மாசி, பங்குனி, சித்திரை ஆகிய கோடை காலங்களில், அதிக வெப்பத்தினால், வனப்பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்படுவது தற்போது அதிகரித்துள்ளது.

Kodaikanal fire spread in tree and forest areas in getting larger day by day

அந்த வகையில், கொடைக்கானல் பகுதியான பெருமாள் மலையில் இரண்டாவது நாளாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. மேலும் காட்டுத்தீயினால் அரிய வகை மரங்கள், மூலிகைகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. காட்டுத்தீ மெல்ல மெல்லப் பரவி குடியிருப்பு பகுதிகள், வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்குச் சொந்தமான நிலங்களிலும் பரவி வருகிறது.

இந்த காட்டுத்தீயை அணைக்க தியிணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். நள்ளிரவு முதல் தீத்தடுப்பு எல்லைகள் அமைப்பது, புதர்களை வெட்டி தடுப்புகள் அமைப்பது போன்ற தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து மளமளவென எரிந்து வரும் காட்டுத்தீயால் அப்பகுதி முழுவதும் புகையால் சூழ்ந்துள்ளது. தோகை வரை, மயிலாடும்பாறை மற்றும் மச்சூர் வனப்பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்துள்ளது என்ற தகவல் மக்களுக்கு வேதனை அளிக்கிறது.

Share this post