ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை: விடுதலை செய்து தீர்ப்பளித்த இலங்கை நீதிமன்றம்..!!

Fishermens released by srilankan government after days

கொழும்பு: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கவும், இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவத்தை தடுத்து நிறுத்தவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இருப்பினும், தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்லையில், நேற்று முன்தினம் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

கடந்த 12ம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் கிளிநொச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து அந்த 12 பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share this post