லாரன்ஸ் நடிக்கும் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம்..! ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும்..!

Director Iswarya Rajinikanth Actor Raghava Lawrence New Tamil Cinema Movie

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 2012 ஆம் ஆண்டு வெளியான “3” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து “வை ராஜா வை” படத்தையும் இயக்கினார்.

இந்நிலையில், முசாபிர் என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி உள்ளார். நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்சும், ஐஸ்வர்யாவும் திடீரென்று சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் சந்தித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, அன்பான அண்ணன் லாரன்சை சந்தித்த பிறகு எனது மூளை இன்னும் வேகமாக செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.

லாரன்ஸ் நடிக்கும் படத்தை ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து லாரன்ஸ் கூறுகையில், நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை பாச உணர்வில் சந்தித்தோம். தொழில் ரீதியிலான சந்திப்பாகவும் இது அமைந்தது. அதை ஐஸ்வர்யா ஒரு வாரத்தில் அறிவிப்பார் என்று கூறினார்.

Share this post