சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் என்ன நடைமுறைகள்.. முதல்வர் ஆலோசனை கூட்டம்

Corona restrictions to get planned in tamilnadu by stalin

கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் அதிகரித்து உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன், கொரோனா உருமாற்றம் பெற்று ஓமைக்ரான் வைரஸாக மாறியது பற்றி தகவல் வெளியானது. இந்நிலையில், இதன் தாக்கம் சற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மேலும், இதுவரை பாதிப்படைந்தவர்களும் குணமடைந்து வீடு திரும்பி வருகின்ற்னர். இந்த சந்தோசமான தகவலை நினைத்து உலக மக்கள் பெருமூச்சு விட தொடங்கியதுதான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர தொடங்கியது.

அங்கு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், வருமுன் காப்போம் என்ற முற்போக்கு சிந்தனையுடன், தமிழகத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பினர், தற்போது ஒமிக்ரான் தொற்று முழுமையாக குறையவில்லை, அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து அரசுகள் முழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது உள்ளிட்டவை தொடர்பாக பல கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தினசரி ஆயிரக்கணக்கானனோர் வெளிநாடுகளுக்கு பயணித்து வரும் சூழலில், தமிழகத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Share this post