நியூ லுக்கிற்கு மாறும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் ! ரூ.139 கோடி வழங்கி 18 நிபந்தனைகளுடன் அளிக்கப்பட்ட உத்தரவு !

Chennai chepauk stadium getting renovated to new look for increased viewers

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை புதுப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் மற்றும் திட்ட அறிக்கையுடன் புதுப்பித்தலுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அனுமதித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Chennai chepauk stadium getting renovated to new look for increased viewers

ரூ.139 கோடி செலவில் மைதானத்தை 62,000 சதுர அடியில் இருந்து 77,000 சதுர அடியாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக 36,000 பார்வையாளர்கள் அமரலாம் என கூறப்படுகிறது.

Chennai chepauk stadium getting renovated to new look for increased viewers

18 நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உத்தரவிடபட்டுள்ள நிலையில், திருவல்லிக்கேணி அரசுப் பள்ளி மாணவர்கள் திறனை மேம்படுத்த ரூ.20 லட்சம், அடையாற்றை தூய்மைப்படுத்த ரூ.25 லட்சம், பக்கிங்காம் கால்வாய் தூர்வார ரூ.25 லட்சம் என சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் சார்பில் வழங்கப்பட உள்ளது.

Chennai chepauk stadium getting renovated to new look for increased viewers

அதே சமயம், நீர்நிலை மற்றும் நீரோட்டம் சார்ந்த இடங்களில் விரிவாக்கப் பணிகள் நடைபெற கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Share this post