ஏப்.26 முதல் சிபிஎஸ்இ 10 &12ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வுகள் - தேர்வு அட்டவணை வெளியீடு !

Cbse 10th 12th board exams schedule has been announced

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளி கல்லூரிகள் நடைமுறைகள் அனைத்தும் மாறுபட்டு நடைபெற்று வந்தது. ஆன்லைன் வழியாக பாடங்கள், ஒரு சில வகுப்புகளுக்கு ஆல் பாஸ் என இருந்து வந்தது. கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

சமீபத்தில் மாநில கல்வி பாடத்திட்டத்தின் படி பயிலும் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15வரை நடைபெறும். சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெறும் என சொல்லப்பட்டுள்ளது.

2ம் பருவத் தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கும் எனவும், தேர்வுக்கான பாட வாரியான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்வு கால அட்டவணை, தேர்வு நேரம், தேர்வுகள் உள்ளிட்ட விவரங்களுக்கு இணையதள முகவரி www.cbse.gov.in அனுகலாம். தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக வினாத்தாளை படிக்கச் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Share this post