10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே ! இந்த அறிவிப்பு உங்களுக்கு தான் !

Announcement for 10th std public exam students regarding hall ticket

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 10ம் வகுப்பு தேர்வு நடைபெறாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. அதன் பின்னர், கொரோனா பரவல் குறைந்த நிலையில், 2021 செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Announcement for 10th std public exam students regarding hall ticket

அதில், 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான எண்ணுடன் கூடிய பெயர் பட்டியல் வெளியிடுவது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Announcement for 10th std public exam students regarding hall ticket

அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுக்கான எண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலை நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டடுள்ளது. தேர்வெண் பட்டியலை http://dge.tn.gov.in என்ற அரசின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this post